வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி
வீட்டுக்கு ஒரு விஞ்ஞானிபுதிய தலைமுறை

புதிய தலைமுறை அறிவியல் கண்காட்சி: தனியார் பள்ளி மாணவர் சீனியர் பிரிவில் வெற்றி

புதிய தலைமுறை அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் சாதனை
Published on

புதிய தலைமுறை மற்றும் யுனைடெட் கல்வி குழுமங்கள் இணைந்து நடத்தும் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி அறிவியல் கண்காட்சியின் 12 ஆம் ஆண்டு தொடக்க விழா போட்டியில் ஜூனியர் பிரிவில் அரசூர் அரசு பள்ளி மாணவர்களும், சீனியர் பிரிவில் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவனும் முதல் பரிசை தட்டிச் சென்றனர்.

பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய தலைமுறை வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி இன்று அறிவியல் கண்காட்சியை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. இந்த ஆண்டு கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள united தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றதூ. 2025 ஆம் ஆண்டின் முதல் நிகழ்வை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பாரதியார் பல்கலையின் முன்னாள் பேராசிரியர் நடராஜன், யுனைடெட் கல்விக் குழும நிறுவனர் தலைவர் சண்முகம், கல்லூரியின் துணை முதல்வர் கோகிலா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

ஜூனியர் , சீனியர் என 2 பிரிவில் மொத்தம் 450 கும் மேற்பட்ட படைப்புகளை பள்ளி மாணவர்கள் காட்சிப்படுத்தி உள்ளனர். அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருள்கள் முதல் அதி நவீன தொழில்நுட்பம் வரை புதிய புதிய வித்தியாசமான படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர்.

பள்ளி மாணவர்களின் படைப்புகளுக்கிடையே கடும் போட்டி நிலவு எண்ணையில் ஜூனியர் பிரிவில் அரசூர் அரசு பள்ளியைச் சேர்ந்த ஐசக், மருந்தீசன் ஆகியோர் முதல் பரிசை தட்டிச் சென்றனர். சீனியர் பிரிவில் தனியார் பள்ளியைச் சேர்ந்த தனவ் முதல் பரிசை வென்றார். போட்டியில் முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள், மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதைத் தவிர போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்றமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com