”பகவான்” போல ”விஜயா” இடமாற்றத்திற்கும் மாணவர்கள் எதிர்ப்பு !

”பகவான்” போல ”விஜயா” இடமாற்றத்திற்கும் மாணவர்கள் எதிர்ப்பு !

”பகவான்” போல ”விஜயா” இடமாற்றத்திற்கும் மாணவர்கள் எதிர்ப்பு !
Published on

சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சேந்தமங்கலம், பின்னரும், சித்தூர் ஆலப்பாக்கம், ஆட்டுபாக்கம், கடமனல்லூர், பரமேஸ்வமங்கள்ளம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 1200 கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இந்தப் பள்ளியில் பயின்று வருகிறார்கள்.பள்ளியில் தமிழாசிரியராக கடந்த 30 ஆண்டுகளாக விஜயா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவரை தற்போது பள்ளி கல்வித்துறை பணியிடை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை தொடர்ந்து ஆசிரியர் தற்போது குடியாத்தம் பள்ளிக்கு பணி மாறுதலில் பணியாற்றி வருகிறார்.இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து பணி மாறுதல் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் அதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பள்ளி வகுப்புகளுக்கு சென்றனர்.

 அதனைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோரிடம் முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அவர்கள் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கூடாது, மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் குறித்து உரிய பரிசீலனை நடத்தப்படும் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு பெற்றவர் முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அவர்களை சந்திக்க சென்றுள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com