அலங்கோலமான ஹேர் ஸ்டைலுடன் வந்த மாணவர்கள் - பெற்றோரை வரவழைத்து அறிவுரை வழங்கிய போலீசார்

அலங்கோலமான ஹேர் ஸ்டைலுடன் வந்த மாணவர்கள் - பெற்றோரை வரவழைத்து அறிவுரை வழங்கிய போலீசார்
அலங்கோலமான ஹேர் ஸ்டைலுடன் வந்த மாணவர்கள் - பெற்றோரை வரவழைத்து அறிவுரை வழங்கிய போலீசார்

ராசிபுரத்தில் பல வண்ணங்களோடு அலங்கோல ஹேர் ஸ்டைலுடன் இருசக்கர வாகனத்தில் வந்த பள்ளி மாணவர்களை மடக்கிய போலீசார், அவர்களது பெற்றோரை வரவழைத்து மாணவர்களுக்கு முடி மாற்றம் செய்து தக்க அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.

தற்போது கொரோனா பாதிப்பையொட்டி தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நடைமுறையில் உள்ளது. பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பல மாணவர்கள் ஆன்லைன் வகுப்பிற்கு செல்லாமல் இருந்து வருகின்றனர். வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் மாணவர்கள் பொழுதுபோக்கு ஏதுமின்றி செல்போனிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர்.

இதையடுத்து உடை அலங்காரங்களில் புது புது ஸ்டைலை புகுத்திய வரும் மாணவர்களின் கவனம் தற்போது ஹேர் ஸ்டைலுக்கு திரும்பியுள்ளது. பல இளைஞர்கள் தங்களது தலைமுடியை வயல் வெளியில் பயிர் நாற்று விடுவது போல வெட்டி கொண்டு உலா வருகின்றனர். மேலும் சிலர் விதவிதமான கலர் ஏற்றி, காக்டைல் (சேவல் வால்) போல வர்ண ஜாலங்களில் வீதி உலா வருகின்றனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார், இருசக்கர வாகனத்தில வர்ணஜால ஹேர் ஸ்டைலுடன் வந்த பள்ளி மாணவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களது பெற்றோரை அழைத்து வந்தால்தான் இருசக்கர வாகனம் தரப்படும் என நிபந்தனை விதித்தனர்.

இதைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் வந்ததும், ஹேர் கட்டிங் சலூனுக்கு சென்று மகனின் ஹேர் ஸ்டைல் மாற்றினால்தான் வாகனம் தரப்படும் என கூறியதால் வேறு வழியின்றி அலங்கோல ஹேர்ஸ்டைலை ஒருவழியாக மாற்றிக்கொண்டு இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றனர். படிக்க வேண்டிய வயதில் ஒழுக்கத்தோடு நன்றாக படிக்க வேண்டும் என மாணவர்களுக்கு போலீசார் அறிவுரையும் வழங்கினர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com