ஆரணி: பயணச்சீட்டு கேட்ட நடத்துநர்... காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட முயன்ற மாணவர்கள்

ஆரணி: பயணச்சீட்டு கேட்ட நடத்துநர்... காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட முயன்ற மாணவர்கள்
ஆரணி: பயணச்சீட்டு கேட்ட நடத்துநர்... காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட முயன்ற மாணவர்கள்

ஆரணியில் கல்லூரி மாணவர்களை அரசு பேருந்தில் பயணச்சீட்டு எடுக்க கூறிய நடத்துநரை கண்டித்து காவல் நிலையம் முன்பு கல்லூரி மாணவர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி டவுன் மற்றும் சுற்றி வட்டார பகுதியான வடுகசாத்து, சேவூர், தச்சூர் உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் செய்யார் அரசு கலை க்கல்லூரியில் பயின்று வருகின்றனர். மேலும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய அடையாள அட்டை போதுமானது என்று அரசு அறிவித்துள்ளது. ஆரணியிலிருந்து செய்யாருக்குச் செல்ல போதிய பேருந்து வசதியில்லை என்று கல்லூரி மாணவர்கள் பல முறை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்

இந்நிலையில் இன்று மாலை ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் 8ம் நம்பர் கொண்ட ஆரணி தேவிகாபுரம் மார்க்கமாக செல்லும் அரசு பேருந்தில் செய்யார் கல்லூரி மாணவர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அப்போது கல்லூரி மாணவர்களை பேருந்து பயண சீட்டு எடுக்க சொல்லி, நடத்துநர் மாணவர்களிடம் கூறியுள்ளார்.

அப்போது கல்லூரி மாணவர்கள் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உரிய அடையாள அட்டை உள்ளது என்றும் எதற்கு பயண சீட்டு எடுக்க வேண்டும் என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பேருந்தின் ஒட்டுநர் பேருந்தை ஆரணி நகர காவல் நிலையம் முன்பு நிறுத்தினார். இந்நிலையில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் திடிரென ஆரணி நகர காவல் நிலைய முன்பு மறியல் செய்ய முயன்றனர்.

அப்போது ஆரணி நகர காவல்துறை உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மாணவர்களை எச்சரித்து, அரசு பேருந்து நடத்துநரிடம் ‘இன்று ஒரு நாள் கல்லூரி மாணவர்களை பயண சீட்டு கேளுங்கள். ஆனால் நாளை கல்லூரி நிர்வாகத்திடம் அணுகி பிரச்சனையை முடித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி அறிவுறுத்தி அனுப்பினார். இதனால் காவல் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com