ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள், மாணவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொங்கல் பண்டிகைக்கு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும். அதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 2000 -க்கும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்க வேண்டும், ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.