தமிழ்நாடு
இலங்கையில் பொருளாதார நெருக்கடி: பிரதமர் வீடுமுன்பு வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி: பிரதமர் வீடுமுன்பு வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினர்.
வவுனியா காமினி மகாவித்தியாலய முன்பு தொடங்கிய பேரணி, கடை வீதி வழியாக மணிக்கூடு கோபுரத்தை வந்தடைந்தது. அப்போது அதிபர் கோட்டாபய மற்றும் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மாணவர்களின் போராட்டத்தால் யாழ்ப்பாணம் கண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.