சென்னை: மாணவர்கள் திடீர் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட புறநகர் ரயில் சேவை

சென்னை: மாணவர்கள் திடீர் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட புறநகர் ரயில் சேவை
சென்னை: மாணவர்கள் திடீர் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட புறநகர் ரயில் சேவை

ரயிலில் பயனம் செய்த மாணவன் ஒருவர் தனது புத்தக பையில் கற்கள் வைத்திருந்தாக ஆவடி ரயில்வே போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற மாணவனை விடுவிக்கக்கோரி சக மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் மின்சார ரயில் நேற்று மதியம் புறப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட மாநில கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பயணம் செய்தனர். அவர்களில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன் நவீன் என்பவர் தனது புத்தகப்பையில் ஜல்லி கற்களை வைத்து இருந்தார். இதனை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படையினர், அவரை பிடித்து ஆவடி ரயில் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

இதனை தெரிந்து கொண்ட சக மாணவர்கள் நவீனை விடுவிக்கும்படி போலீசாரிடம் கேட்டு கொண்டுள்ளனர். ஆனால், போலீசார் அவரை விடுவிக்க மறுத்துள்ளனர். இதனையடுத்து, 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஆவடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் நின்று மின்சார ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து, அங்கிருந்து மின்சார ரயில் செல்ல முடியாததால், ஆங்காங்கே வழியில் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன.

தகவலறிந்து ஆவடி ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் மாணவன் நவீனை விடுவித்தால் தான், போராட்டத்தை கைவிடுவோம் என திட்டவட்டமாகக் கூறினார். இதன் பிறகு, ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் பேசி மாணவன் நவீனை விடுதலை செய்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் பிறகு, மின்சார ரயில் அரைமணி நேரம் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றது. கல்லூரி மாணவர்கள் நடத்திய மறியலால், ஆவடி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com