திருவாரூர்: கொரோனா விதிமுறைகளை மறந்து படிகெட்டுகளில் தொங்கிச்செல்லும் மாணவர்கள்

திருவாரூர்: கொரோனா விதிமுறைகளை மறந்து படிகெட்டுகளில் தொங்கிச்செல்லும் மாணவர்கள்

திருவாரூர்: கொரோனா விதிமுறைகளை மறந்து படிகெட்டுகளில் தொங்கிச்செல்லும் மாணவர்கள்
Published on

உலகம் முழுவதும் உருமாறிய கொரோனாவான ஓமைக்ரான் வேகமாக பரவிவரும் நிலையில் முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளி பற்றிய விழிப்புணர்வின்றி கல்லூரி மாணவர்கள் சுற்றித் திரிவதும், பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவிக அரசு கலைக்கல்லூரியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்றுவருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும் தற்போது உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா மாறுபாடு வைரஸான ஓமைக்ரான் குறித்த அச்சமின்றி பெரும்பாலான மாணவர்கள் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் சுற்றித் திரிகிறார்கள். மேலும் திருவிக கலைக் கல்லூரி வழியாக திருவாரூர் செல்லும் பேருந்துகளில் பயமின்றி படிக்கட்டுகளில் பயணம் மேற்கொள்கிறார்கள். ஏற்கெனவே அரசு படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் மேற்கொண்டால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநர் மாணவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கவேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.

ஆனாலும் அவர்களின் அறிவுரையை கேட்காமல் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அச்சமின்றி படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணிப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே மாணவர்களின் நலன் கருதி கூடுதல் பேருந்துகளை இயக்கவேண்டும் என்றும், மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கவேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com