\
விடைப்பெற்ற ஆசிரியை...  விடைகொடுக்க முடியாமல் கண்ணீர்விட்ட மாணாக்கர்கள்!

விடைப்பெற்ற ஆசிரியை... விடைகொடுக்க முடியாமல் கண்ணீர்விட்ட மாணாக்கர்கள்!

விடைப்பெற்ற ஆசிரியை... விடைகொடுக்க முடியாமல் கண்ணீர்விட்ட மாணாக்கர்கள்!
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணி உயர்வு பெற்று வேறு பள்ளிக்குச் செல்லும் ஆசிரியைக்கு மாணாக்கர்களும் சக அசிரியர்களும் கண்கள் பனிக்க பிரியாவிடை கொடுத்தனர்.

விராலிமலை அருகே மலைக்குடிப்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 11 ஆண்டுகளாக பணியாற்றியவர் ஜெனிட்டா. மாணாக்கர்களிடம் கனிவாக நடந்து கொள்வதோடு, அவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தி வந்துள்ளார். ஆசிரியை ஜெனிட்டாவுக்கு பதவி உயர்வும் பணியிட மாற்றமும் கிடைத்துள்ளது. இதையடுத்து அவருக்கு பிரியாவிடை கொடுக்கும்விதமாக பள்ளியில் நடந்த விழாவில், மாணாக்கர்களின் பெற்றோரும் சக ஆசிரியர்களும் ஜெனிட்டாவுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தனர்.

அதே நேரத்தில் அவரைப் பிரியும் கவலையில் கண்ணீர் விட்டு கலங்கினர். சில பிள்ளைகள் ஜெனிட்டா டீச்சரை பிரிய மனமின்றி வாய்விட்டு அழுதது அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com