பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்
Published on

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். 

பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு கடந்த 19ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்தக் கட்டண உயர்வு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. அரசின் இந்தத் திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பேருந்து கட்டணம் 50% உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் கட்டண உயர்வைக் கண்டித்து திருவண்ணாமலை அரசுக் கலைக்கல்லூரி மாணவ,மாணவியர் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளை சிறைபிடித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து நுழைவாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கல்லூரி மாணவர்கள் கூறுகின்றனர். உடனடியாக கட்டண உயர்வைத் திரும்ப பெற வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com