நீர்ப்பறவைகளால் நெல்லை வ.உ.சி மைதானத்தை வண்ணமயமாக்கிய மாணவ மாணவிகள்!

நீர்ப்பறவைகளால் நெல்லை வ.உ.சி மைதானத்தை வண்ணமயமாக்கிய மாணவ மாணவிகள்!
நீர்ப்பறவைகளால் நெல்லை வ.உ.சி மைதானத்தை வண்ணமயமாக்கிய மாணவ மாணவிகள்!

`நீர் நிலைகள் நீர்ப் பறவைகளை பாதுகாப்போம்’ என்ற வாசகத்துடன் 50-க்கும் மேற்பட்ட அரிய வகை பறவைகளை ஓவியங்களாக  தீட்டும் பணியில் மாணவ மாணவிகள் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உசி மைதானத்தில் `நீர் நிலைகளை பாதுகாப்போம், நீர்ப் பறவைகளை பாதுகாப்போம்’ என்ற வாசகத்துடன் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியங்களை தீட்டும் பணியில் மாணவ மாணவிகள் ஈடுபட்டனர்.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நீர் நிலைகள் உள்ளன. இந்த நீர் நிலைகளுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பறவைகள் வந்து செல்கின்றது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில், கூந்தன்குளம், திருப்புடை மருதூர் போன்ற இடங்களில் உள்ள நீர்நிலைகளுக்கு ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றது.

பொருநைக்கு வருகை தரும் வெளிநாட்டு பறவைகளை கௌரவிக்கும் விதமாக `மணிமுத்தாறு அகத்திய மலை மக்கள் சார் இயற்கை வளம் காப்பு மையம்’, நெல்லை மாநகராட்சி, நெல்லை இயற்கை கழகம், சிவராம் கலைக்கூடம் ஆகியவை சார்பில் 42 நீர்நிலை பறவைகளை ஓவியமாக தீட்டும் பணியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் நீர் நிலைகளை பாதுகாத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர் ஓவியங்கள் வர்ணங்களாக தீட்டப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com