\
பட்டாக்கத்தியுடன் மோதல்... மேலும் இரு மாணவர்கள் கைது..!

பட்டாக்கத்தியுடன் மோதல்... மேலும் இரு மாணவர்கள் கைது..!

பட்டாக்கத்தியுடன் மோதல்... மேலும் இரு மாணவர்கள் கைது..!
Published on

சென்னை அரும்பாக்கத்தில் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் மேலும் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.‌ மோதலில் ஈடுபட்ட மாணவர்களில் ஏற்கெனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள், கல்லூரியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களை கண்காணிக்க ஆசிரியர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருள்மொழிச் செல்வன் உறுதிபட கூறியுள்ளார்.

இந்நிலையில் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் மேலும் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர் ரவிவர்மன், அம்பேத்கர் கல்லூரி மாணவர் ராகேஷ் குமார் ஆகிய இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com