‘சமூக ரீதியாக பாகுபாடு காட்டுவதாக தலைமையாசிரியை மீது புகார்

‘சமூக ரீதியாக பாகுபாடு காட்டுவதாக தலைமையாசிரியை மீது புகார்
‘சமூக ரீதியாக பாகுபாடு காட்டுவதாக தலைமையாசிரியை மீது புகார்

கடலூரில் பள்ளித் தலைமையாசிரியை மாணவர்களிடையே சமூக ரீதியாக பாகுபாடு காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஈ.கீரனூர் ஊராட்சி ஒன்றியத்தில் துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 64 மாணவர்களும். 3 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் அனுசியா என்ற தலைமை ஆசிரியை மாணவ-மாணவிகளிடம் சமூக ரீதியாக பாகுபாடு காட்டுவதாகவும், மாணவ - மாணவிகளை அவதூறாக பேசுவதாகவும் புகார் எழுந்தது. எனவே அவரை இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர் மற்றும் மாணவ மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

இதுகுறித்து திட்டக்குடி காவல்துறை மற்றும் திட்டக்குடி வருவாய் வட்டாட்சியர் ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர்கள் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக மாணவர்களை தூண்டி விட்டு பிரச்னை செய்வதாகவும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகமும் பள்ளிக்கல்வித்துறையும் உரிய விசாரணை செய்து தவறு செய்த ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

இதுகுறித்து திட்டக்குடி வருவாய் வட்டாட்சியர் செந்தில் வேலனிடம் கேட்டதற்கு, தான் நேரில் இன்று விசாரணை செய்ததாகவும், பெற்றோர்களும் மாணவர்களும் தலைமையாசிரியர் மீது புகார் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பள்ளிக்கல்வித்துறை மூலம் விரிவான விசாரணை நாளை நடைபெறும் என்றும், விசாரணை முடிவில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com