தமிழ்நாடு
சாகசம் செய்வதற்காக முயற்சித்த மாணவர் தீப்பிடித்து உயிரிழப்பு
சாகசம் செய்வதற்காக முயற்சித்த மாணவர் தீப்பிடித்து உயிரிழப்பு
வாயில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைக்க முயற்சித்தபோது பள்ளி மாணவர், தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெபின் என்பவர், சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் தனியாக இருந்த ஜெபின், தொலைக்காட்சியில் சாகச நிகழ்ச்சிகளை பார்த்ததாக கூறப்படுகிறது.
அதனால் தூண்டப்பட்ட அவர், வாயில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைக்க முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. உடல் முழுவதும் தீ பரவியதில் படுகாயமடைந்த ஜெபின் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

