600-க்கு 514 மதிப்பெண்கள் எடுத்தும் தோல்வி? மாணவியின் மதிப்பெண் பட்டியலில் குளறுபடி!

பிளஸ்-2 பொதுத்தேர்வில் 600க்கு 514 மதிப்பெண்கள் எடுத்தும் 4 பாடங்களில் தோல்வி என்று வந்துள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளார் மாணவி ஆர்த்தி.
மாணவி ஆர்த்தி
மாணவி ஆர்த்திTwitter

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. பல மாவட்டங்களில் இருந்து மாணவிகள் நூற்றுக்குள் நூறு மதிப்பெண்கள் எடுத்திருந்தனர். இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வில் 95.84 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொதுத்தேர்வு
பொதுத்தேர்வு

அந்த வகையில் மதுரை மாவட்டம் சூரக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்னும் மாணவி 2021ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருந்தார். இந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக 12 ஆம் வகுப்பு தொடர முடியாமல் இந்த ஆண்டு தனியார் மூலம் பொது தேர்வு எழுத அனுமதி பெற்று எழுதியிருந்தார். இந்த நிலையில் திருமங்கலம் பிரான்சிஸ் பள்ளியில் ஆர்த்தி பொதுத்தேர்வு எழுதியிருந்தார். நேற்று முன்தினம் முடிவு வெளியான நிலையில் ஆர்த்தி தேர்வு முடிவு பார்த்து வீட்டிலிருப்போர் அதிர்ச்சி அடைந்தனர்.

அதில் தமிழில் 100க்கு 138 மதிப்பெண்களும், இயற்பியலில் 71 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் நூற்றுக்கு 92 மதிப்பெண்களும், கணிதத்தில் நூற்றுக்கு 56 மதிப்பெண்களும் , வேதியலில் 71 மதிப்பெண்களும் பெற்றுள்ளதாக முடிவு வெளியாகி உள்ளது. தமிழில் 100க்கு 138 மதிப்பெண்கள் வந்ததால் குழப்பம் அடைந்த ஆர்த்தி, இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் தேவஸ்தானம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சரியான விளக்கம் கிடைக்காததால். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளார்.

மதுரை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம்
மதுரை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம்

பிளஸ்-2 பொதுத்தேர்வில் 600க்கு 514 மதிப்பெண்கள் எடுத்தும் 4 பாடங்களில் தோல்வி என்று வந்துள்ளதால் குழப்பமடைந்தார் ஆர்த்தி. இந்த சம்பவம் குறித்து கள ஆய்வு செய்வதில் பொதுத்தேர்வு தேர்வு எழுத பதிவு செய்யும்போது அதில் 10 மதிப்பெண் உள்மதிப்பீட்டு (Internal Mark) போக மீதமுள்ள 70, 90 மதிப்பெண்ணுக்கு தேர்வு எழுதப்படும். அதன் முடிவு 150, 200 மதிப்பெண்ணுக்கு மதிப்பெண் பட்டியல் வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிளஸ் டூ தேர்வு எழுதி முடித்த பின்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 600 மதிப்பெண்ணுக்கு தேர்வு முடிவுகள் வரும் என எதிர்பார்த்த நிலையில் 1200க்கு மதிப்பெண் வந்ததால் இந்த குழப்பத்திற்கு காரணம்.

கடந்த 2021ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் படித்து முடித்த நிலையில் தொடர்ந்து படிப்பை தொடர முடியாததால் இந்தாண்டு புதிய பாடத்திட்டத்தில் 600 மதிப்பெண்ணுக்கு பதிவு செய்வதற்கு பதிலாக 1200 மதிப்பெண்ணுக்கு பதிந்தது மாணவியா அல்லது திருப்பரங்குன்றம் தேவஸ்தான பள்ளியில் பதிவு செய்தவர்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி இயற்பியல், வேதியியல், உயிரியல் மூன்று பாடங்களிலும் 1200-க்கு மதிப்பிட்டாலும் தேர்ச்சி பெற்ற நிலையிலும் தேர்ச்சி பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா முறையாக விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இயற்பியல், வேதியல், உயிரியல் என மூன்று பாடங்களில் தேர்ச்சி பெற்றாலும், கணித பாடத்தில் 600க்கு மதிப்பிட்டாலும் 1200க்கும் மதிப்பிட்டாலும் கணிதத்தில் 56 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறாததால் மறுதேர்வு எழுத வேண்டியது கட்டாய நிலையே உள்ளது. இவ்வளவு இன்னல்களுக்கு பிறகு மாணவி படிப்பை தொடர போகிறாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டிய நிலை உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com