பள்ளியில் முதல் மதிப்பெண்’ ஆனாலும்.. மாணவன் எடுத்த விபரீத முடிவு !

பள்ளியில் முதல் மதிப்பெண்’ ஆனாலும்.. மாணவன் எடுத்த விபரீத முடிவு !

பள்ளியில் முதல் மதிப்பெண்’ ஆனாலும்.. மாணவன் எடுத்த விபரீத முடிவு !
Published on

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த விரக்தியில் மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குடியாத்தம் அடுத்த கொட்டாரமடுகு கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவரின் மகன் அசோக்குமார்(17). பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார்.

இவர் 12 ஆம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கு 481 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் படித்த தனியார் பள்ளியில் அசோக்குமார் தான் முதல் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்துக்கு வந்த குடியாத்தம் காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com