\
அரசின் உதவித்தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்த மாணவி!

அரசின் உதவித்தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்த மாணவி!

அரசின் உதவித்தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்த மாணவி!
Published on

கொரோனா தடுப்பு பணிகளுக்காக உதவ, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தனக்கு அரசு வழங்கும் 7500 ரூபாய் ஊக்கத்தொகையை வழங்கியுள்ளார் மாணவி.  

 கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையொட்டி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் நிதி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள், மாணவர்கள், தொழில்துறையினர், திரைத்துறையினர் என பலத்துறையினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

அந்த வகையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் காவல்துறையினர் குடும்பத்து மாணவர்களிடையே முதல் மதிப்பெண் பெற்ற அனுசுயா, தனக்கு அரசு வழங்கும் 7500 ரூபாயை கொரோனா தடுப்புப் பணிகளுக்காக திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமாரிடம் அளித்தார். மாணவியின் இந்த உதவும் குணத்திற்கு பாராட்டுகள் தெரிவித்திருக்கிறார் எஸ்.பி விஜயகுமார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com