கொளத்தூரில் வெடித்த மர்மப் பொருள்..அதிர்ந்த வீடுகள்.. அந்தரத்தில் பறந்த சீட்டுகள்- மாணவர் உயிரிழப்பு

கொளத்தூரில் மர்மப் பொருள் வெடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேதம் அடைந்த வீடு
சேதம் அடைந்த வீடு PT WEB

சென்னை அடுத்த, கொளத்தூர் ஜி.கே.எம் பகுதியில் வசித்து வருபவர் ஹரிஹரன். இவரது மகன் ஆதித்ய பிரணவ். இவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஹரிஹரன் தனது மகன் பிரணவுடன் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு புதிய வீட்டை வாங்கி குடி பெயர்ந்துள்ளார். ஆதித்ய பிரணவ், அறிவியல் பயின்று வரும் மாணவர் என்பதால், அடிக்கடி வீட்டில் ஏதாவது ஒரு ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருப்பார் என கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் ஒரு விதமான ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, கரும்புகை வந்துள்ளது, அதனை அக்கம் பக்கத்தினர் அதனைப் பார்த்து எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மதியம் 3 மணியளவில் ஆதித்யப் பிரணவ் வீட்டிலிருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதில் அருகிலிருந்த மூன்று வீடுகளும் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் ஆதித்ய பிரணவ் வீடு முழுவதும் சேதமடைந்து சம்பவ இடத்திலேயே ஆதித்த பிரணவ் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த, போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆதித்ய பிரணவ் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com