\
ஆசிரியை திட்டியதால் வகுப்பறைக்குள் தற்கொலைக்கு முயன்ற மாணவன்!

ஆசிரியை திட்டியதால் வகுப்பறைக்குள் தற்கொலைக்கு முயன்ற மாணவன்!

ஆசிரியை திட்டியதால் வகுப்பறைக்குள் தற்கொலைக்கு முயன்ற மாணவன்!
Published on

சிவகங்கை அருகேயுள்ள திருமாஞ்சோலை அரசுப்பள்ளியில்‌ ஆசிரியர் திட்டியதால் 10ஆம் வகுப்பு மாணவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

திருமாஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன், பிரதாப். அதே ஊரிலுள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். சில நாட்களாக உடல்நலக்குறைவால் பிரதாப் பள்ளிக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. சிகிச்சைக்கு பின் பள்ளி சென்ற பிரதாப்பை, வகுப்பு ஆசிரியை கீர்த்திகா தேவி சக மாணவர்கள் முன் திட்டியதாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த மாணவன் பள்ளியிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை ஆசிரியர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவனை திட்டியதாக கூறப்படும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com