பள்ளி சென்ற முதல் நாளே மாணவர்களுக்கு நேர்ந்த அவலம்!

பள்ளி சென்ற முதல் நாளே மாணவர்களுக்கு நேர்ந்த அவலம்!

பள்ளி சென்ற முதல் நாளே மாணவர்களுக்கு நேர்ந்த அவலம்!
Published on

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே, உத்திரமேரூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் குடிநீர் தொட்டியினை சுத்தபடுத்த பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்ட அவலநிலை ஏற்பட்டது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவுப்படி, கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாள் என்பதால் பல இடங்களிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தன. அத்துடன் முதல் நாளே அன்றே வகுப்பு பாடங்கள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டன. அத்துடன் மாணவர்களுக்கு இந்த ஆண்டிற்கான பாட புத்தகங்களும் வழங்கப்பட்டன. 

முதல் நாள் பெரும்பாலான பள்ளிகள் இப்படி படிப்பிலும், மாணவர்களை உற்சாகப்படுத்துவதிலும் மும்முரம் காட்டிய நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தின் பகுதிகளில் உள்ள பல தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் மிக குறைவாக 20க்கும் கீழ் காணப்பட்டனர். இதனால் அப்பகுதியில் அரசு சார்பில் விடுக்கப்பட்ட விழிப்பணர்வுகளுக்கு பெற்றோர்களிடையே வரவேற்பு இல்லாமல் இருப்பது தெளிவாகியது. அதற்கும் மேலாக, சாலவாக்கம் அடுத்த குண்ணவாக்கம் ஊராட்சி நடுநிலையில் மாணவர்களுக்கு நேர்ந்த அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. 

காலை வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், சில மாணவர்கள் சென்று குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யுமாறு பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. அவர்களும் வகுப்பறையில் படிக்காமல், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்துள்ளனர். பள்ளி திறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே குடிநீர், மின்சாரம் மற்றும் வளாகத்தினை தூய்மை செய்தல் உள்ளிட்ட பணிகளை முடித்து வளாகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதன்மூலம் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை, அப்பள்ளி காற்றில் பறக்கவிட்டிருப்பது உறுதியானது. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடமும், ஆசிரியர்களிடமும் விளக்கம் கேட்டபோது, உரிய பதில் அளிக்கமால் ஒருவரை, ஒருவர் மாறி குற்றம்சாட்டினர். மேலும் பள்ளி ஆசிரியர்கள் பலர், பள்ளி நேரங்களிலேயே செல்போனில் பேசிக்கொண்டிருந்தனர். மொத்தத்தில் பள்ளிக்கல்வித்துறை கூறியிருந்த விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரான வகையில், முதல் நாளிலேயே இந்தப் பள்ளி செயல்பட்டுள்ளது.

(தகவல்கள் : பிரசன்னா, புதிய தலைமுறை செய்தியாளர், காஞ்சிபுரம்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com