திமுக போராட்டம்: துரைமுருகன் உள்ளிட்ட 2000 பேர் மீது வழக்குப்பதிவு!
வேளாண் மசோதாக்களை எதிர்த்து போராட்டம் நடத்திய துரைமுருகன் உட்பட 2000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாய சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து நேற்று (28.09.2020) வேலூர் அண்ணா கலையங்கம் அருகே தி.மு.க சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்காதது, கூட்டம் கூடியது, நோய் தொற்று பரவும் வகையில் செயல்பட்டது, பேரிடம் கால விதி மீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், அணைகட்டு தொகு தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும் மத்திய மாவட்ட செயலாளருமான ஏ.பி.நந்தகுமார், வேலூர் மாவட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும் வேலூர் மாநகர செயலாளருமான பா.கார்த்திகேயன் உள்ளிட்டோர் மீது வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 2000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது