\
கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுவீசும்; மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம்

கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுவீசும்; மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம்

கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுவீசும்; மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம்
Published on

தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இன்றும் நாளையும் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வடதமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இன்றும் நாளையும் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com