\
பலமாக வீசிய புயல்காற்று... சாலையில் சென்றுகொண்டிருந்த தொழிலாளிக்கு நேர்ந்த பரிதாபம்

பலமாக வீசிய புயல்காற்று... சாலையில் சென்றுகொண்டிருந்த தொழிலாளிக்கு நேர்ந்த பரிதாபம்

பலமாக வீசிய புயல்காற்று... சாலையில் சென்றுகொண்டிருந்த தொழிலாளிக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

காரைக்குடியில் அடுக்குமாடி குடியிருப்பின் கண்ணாடி கீழே விழுந்த விபத்தில் கேஸ் சிலிண்டர் போடும் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறுகூடல்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவர், கேஸ் சிலிண்டர் போடும் தொழில் செய்து வந்திருக்கிறார். இன்று வழக்கம் போல் இருசக்கர வாகனத்தில் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு தந்தை பெரியார் நகர் பகுதிக்கு கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்யச் சென்றுள்ளார்.

அப்போது பலத்த காற்று வீசியதால், அப்பகுதியில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் மேற்புறம் பொருத்தப்பட்டிருந்த ஜன்னல் கண்ணாடி பெயர்ந்து கீழே சென்று கொண்டிருந்த பழனியப்பன் கழுத்தில் பாய்ந்து வெட்டியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில்,அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து காரைக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com