புதுச்சேரி: மின்துறையை தனியார்மயமாக்க கடும் எதிர்ப்பு - ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி: மின்துறையை தனியார்மயமாக்க கடும் எதிர்ப்பு - ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி: மின்துறையை தனியார்மயமாக்க கடும் எதிர்ப்பு - ஊழியர்கள் போராட்டம்
Published on

புதுச்சேரி மாநில மின்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மின்துறை தலைமை அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மின்துறை அமைச்சர் நமச்சிவாயத்துடன் போராட்டக்குழுவினர் நேற்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இன்று முதல்வர் ரங்கசாமியை சந்திக்க உள்ளனர்.

மின்துறை தனியார் மயமாக்கப்படாது என உறுதி அளித்தால் மட்டுமே போராட்டம் முடிவுக்கு வரும் என ஊழியர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்தால் துறை சார்ந்த பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com