"பெற்றோர் - ஆசிரியர் கழகங்களில் திமுகவினர் தலையிட்டால் நடவடிக்கை" - அமைச்சர் அன்பில் மகேஷ்

"பெற்றோர் - ஆசிரியர் கழகங்களில் திமுகவினர் தலையிட்டால் நடவடிக்கை" - அமைச்சர் அன்பில் மகேஷ்

"பெற்றோர் - ஆசிரியர் கழகங்களில் திமுகவினர் தலையிட்டால் நடவடிக்கை" - அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசுப் பள்ளிகளின் பெற்றோர் - ஆசிரியர் கழகங்களில் திமுகவினர் தலையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

பள்ளி மேலாண்மைக் குழு கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலான பரப்புரை தொடக்கவிழா நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில், மேலாண்மைக் குழுவை மேம்படுத்தும் வகையில் "நம் பள்ளி - நம் பெருமை" என்ற புதிய செயலி ஒன்றை அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு அங்கிருந்த செய்தியாளர்களிடம் அன்பில் மகேஷ் கூறியதாவது:

அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்யவும், மேலாண்மைக் குழுக்களின் அவசியம் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் இந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் பெற்றோர் - ஆசிரியர் கழகங்களில் திமுகவினர் தலையீடு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டுமே மே மாதத்தில் தேர்வு நடத்தப்படும் அடுத்த ஆண்டுகளில் இருந்து, வழக்கம் போல ஏப்ரல் மாதத்திலேயே தேர்வு நடத்தி முடிக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். எனவே, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை அதிகப்படுத்துவது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com