\
நீடிக்கும் வேலைநிறுத்தம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மாலை ஆலோசனை

நீடிக்கும் வேலைநிறுத்தம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மாலை ஆலோசனை

நீடிக்கும் வேலைநிறுத்தம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மாலை ஆலோசனை
Published on

வேலைநிறுத்தத்தில் ஈடு‌ட்டுள்ள அரசு போக்குவரத்து தொழிற்சங்களை சேர்ந்தவர்கள் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளனர்.

ஊதிய உயர்வு காரணமாக, தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மூன்றாவது நாளாக போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் குறைவான அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மூலம் பேருந்துகளை இயக்கி மக்களின் பாதிப்பை குறைத்து வருவதாக, அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடு‌ட்டுள்ள அரசு போக்குவரத்து தொழிற்சங்களை சேர்ந்தவர்கள் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள‌ போக்குவரத்து தொழி‌லாளர்கள் உடனடியாக பணிக்குத்திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு கூறியிருந்தது‌. போக்குவரத்துத்துறை அமைச்சரும் பணிக்குத்திரும்ப தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com