மதுரையில் இன்று கடையடைப்பு போராட்டம்

மதுரையில் இன்று கடையடைப்பு போராட்டம்

மதுரையில் இன்று கடையடைப்பு போராட்டம்
Published on

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி மதுரையில் இன்று கடையடைப்பு போராட்டம்.

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும்,7 ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முத்துராமலிங்க தேவரின் வரலாற்றை இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேவரின் தேசபக்தி பேரவையின் சார்பில் மதுரையில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
 


கோரிப்பாளையம்,தல்லாகுளம்,சிம்மக்கல்,அன்னா பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான உணவகங்கள்,தேநீர் கடைகள்,உள்ளிட்ட வணிக நிறுவனங்களும், மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள எம்.ஜி.ஆர் காய்கறி சந்தை, பழக்கடை சந்தைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பார்வர்டு ப்ளாக் கட்சி,முக்குலத்தோர் புலிப்படை,மூவேந்தர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 15 க்கும் மேற்பட்ட தேவர் சமூதாய அமைப்புகளும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகளும் தேவர் சமுதாய அமைப்புகளும் கோரிப்பாளையம் பகுதியில் இன்று ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளதால் ஆயிரக்கணக்கான போலீசார் கோரிப்பாளையம் பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மதுரையின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com