மூடநம்பிக்கையால் கொடுஞ்செயல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஓபிஎஸ்

மூடநம்பிக்கையால் கொடுஞ்செயல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஓபிஎஸ்

மூடநம்பிக்கையால் கொடுஞ்செயல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஓபிஎஸ்
Published on

ஜோதிடரின் பேச்சைக் கேட்டு மகனை தந்தையே எரித்துக்கொன்ற கொடூர சம்பவத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய மகனால் எதிர்காலத்தில் தனக்கு ஆபத்து நேரலாம் என்று ஜோதிடர் கூறியதால், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராம்கி தனது 5 வயது மகன் சாய் சரணை குடிபோதையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்தக் கோரச் சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கீ வீரமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில் “திருவாரூர் - நன்னிலத்தில், "தனது மகனால் ஆபத்து" என ஜோதிடர் கூறியதால், 5 வயது மகனை தந்தையே எரித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது. மூடநம்பிக்கைகளால் அரங்கேறும் நரபலிகளை தடுக்கும் வகையில், இதுபோன்ற கொடுஞ்செயல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com