போலி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை: எச்சரிக்கும் திருச்சி சித்த மருத்துவ அலுவலர்

போலி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை: எச்சரிக்கும் திருச்சி சித்த மருத்துவ அலுவலர்
போலி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை: எச்சரிக்கும் திருச்சி சித்த மருத்துவ அலுவலர்

அதிகரிக்கும் போலி மருந்துகள் விற்பனை - போலி சித்த மருந்துகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் போலியான சித்தா, ஆயுர்வேத மருந்துகள் விற்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்த வண்ணம் உள்ளன. ஆங்கில மருந்து கடையாக இருந்தாலும், சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மருந்து கடைகளாக இருந்தாலும், வாங்கி விற்கக் கூடிய மருந்துகள் அனைத்தும் அரசு உரிமம் பெற்ற மருந்துகளாக இருக்க வேண்டும்.

அதாவது மருந்துகள் தயாரிக்க அரசு அனுமதி எண், மருந்தில் கலந்துள்ள மூலப் பொருட்களின் பெயர்கள், எவ்வளவு சதவிகிதம் ஒவ்வொரு மருந்தும் கலந்துள்ளது. மருந்து தயாரிப்பு தேதி, மருந்து காலாவதி தேதி, மருந்தின் விலை, மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் முழு முகவரி இவை அனைத்தும் அச்சிடப்பட்டு மருந்து டப்பாக்கள் மீது ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

மேற்கண்ட குறிப்புகள் உள்ள மருந்துகளை மட்டும் சித்தா மருந்து கடைகள், நாட்டு மருந்து கடைகள், ஆங்கில மருந்து கடைகள் வாங்கி விற்க வேண்டும். இவை இல்லாமல் யார் விற்றாலும், எந்த கடையில் இருந்தாலும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட மருந்து ஆய்வாளர்களின் திடீர் ஆய்வில் கண்டறியப்பட்டாலோ அல்லது புகார்கள் வந்தாலோ போலியான மருந்துகளை வாங்கி விற்பவர்களின் கடை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் உரிமையாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை பாயும்” என திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com