ஆபாச பேட்டிகளை வெளியிட்டால் கடும் நடவடிக்கை: யூடியூப் சேனல்களுக்கு காவல் துறை எச்சரிக்கை

ஆபாச பேட்டிகளை வெளியிட்டால் கடும் நடவடிக்கை: யூடியூப் சேனல்களுக்கு காவல் துறை எச்சரிக்கை

ஆபாச பேட்டிகளை வெளியிட்டால் கடும் நடவடிக்கை: யூடியூப் சேனல்களுக்கு காவல் துறை எச்சரிக்கை
Published on

யூடியூப் சேனல்களில் ஆபாச பேட்டிகளை எடுத்து ஒளிப்பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

Chennai Talk என்ற யூடியூப் சேனலில், பெண்ணிடம் ஆபாசமாக பேசி எடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து, இந்த வீடியோ தொடர்பாக பெசன்ட் நகரை சேர்ந்த பெண் ஒருவர், 'பொது இடங்களில் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சாஸ்திரி நகர் போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், பொது இடத்தில் ஆபாசமாக பேட்டி எடுத்ததாக சென்னை டாக் யூடியூப் சேனலை சேர்ந்த அசென் பாட்ஷா, கேமரா மேன் அஜய் பாபு, உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை சாஸ்திரி நகர் போலீசார் கைது செய்தனர்

இவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், யூடியூப் சேனல்களில் ஆபாச பேட்டிகளை எடுத்து ஒளிப்பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “  யுடியூப் சேனல்களில் ஆபாசமான, அருவருக்கத்தக்க வகையில், பதிவு செய்த வீடியோக்களை நீக்க வேண்டும். அப்படியில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.அதே போல யூடியூப் சேனல்களில் ஆபாச பேட்டிகளை எடுத்து ஒளிப்பரப்பினால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 

<iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/mxju_pzh79w" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com