\
போலியான வீடியோக்களை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை – வனத்துறை எச்சரிக்கை

போலியான வீடியோக்களை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை – வனத்துறை எச்சரிக்கை

போலியான வீடியோக்களை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை – வனத்துறை எச்சரிக்கை
Published on

காட்டாற்றில் குளித்த யானைகளை இளைஞர்கள் அச்சுறுத்தியதாக வைரலாகும் வீடியோ சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ளது இல்லை என இணை கள இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளம் ஏற்பட்டு செந்நிறத்தில் ஓடுவதாகவும், இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், மாயாற்றில் யானைகள் குளித்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக சென்ற இளைஞர்கள் யானைகளுக்கு இடையூறு செய்ததால் அவை அச்சத்தில் கரையேறுவதாகவும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பத்தின் இணை கள இயக்குநர் கிருபா சங்கர் கூறுகையில், அந்த வீடியோவில் உள்ள பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அல்ல, இதுபோன்று வேறு இடத்தில் பதிவு செய்த வீடியோவை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com