உணவு தரமில்லை என்றால் மோட்டல்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் ராஜகண்ணப்பன்

உணவு தரமில்லை என்றால் மோட்டல்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் ராஜகண்ணப்பன்
உணவு தரமில்லை என்றால் மோட்டல்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் ராஜகண்ணப்பன்

எந்த மோட்டல்களாக இருந்தாலும் உணவுகள் தரமாக இருக்கவேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. குற்றச்சாட்டுகள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது புதிய பேருந்து நிலையம் கட்டுவது தொடர்பாக நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த அவர்,

தேர்தல் சமயங்களில் அரசு வேலைகளை பற்றி கேள்வி கேட்கக் கூடாது. தேர்தலுக்குப் பிறகுதான் பணிகள் தொடங்கும். நடுவில் சில பணிகள் நடக்கும். ஆனால், அதற்கு தற்போது பொறுப்பாக சொல்ல முடியாது. தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் முழுமையாக எதையும் வெளியில் தெரிவிக்க முடியாது.

நெடுஞ்சாலைகளில் உள்ள தரமற்ற மோட்டல்கள் குறித்து கேட்டதற்கு, குற்றச்சாட்டுகள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த மோட்டல்களாக இருந்தாலும் உணவுகள் தரமாக இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

அரசு சார்பாக புதிய மோட்டார்கள் தொடங்கப்படும் என்ற கேள்விக்கு, மக்களுடைய கோரிக்கைக்கு ஏற்ப பரிசீலிக்கப்படும்.

நகர்ப்புற தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உள்ளது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com