ராசிபுரம்: தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 3 குழந்தைகளை கடித்த வெறிநாய்

ராசிபுரம் அருகே வெறிநாய் கடித்து 3 குழந்தைகள் படுகாயம் அடைந்த நிலையில், சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குழந்தை
பாதிக்கப்பட்ட குழந்தைpt desk

செய்தியாளர்: மோகன்ராஜ்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வடுகம் ஆதிதிராவிடர் காலனி சாலையில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சாலையில் விளையாடிக் கொண்டிருந்த தேஜேஸ்வரன், பிரியதர்ஷினி, யாகவிர் ஆகிய 3 குழந்தைகளையும் வெறிநாய் கடித்துள்ளது.

இதையடுத்து குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர்கள் நாயை விரட்டியடித்து படுகாயமடைந்த 3 குழந்தைகளையும் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பாதிக்கப்பட்ட குழந்தை
பாதிக்கப்பட்ட குழந்தைpt desk

அங்கு மருத்துவர்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டதோடு, முகத்தில் படுகாயமடைந்த தேஜேஸ்வரன் என்ற சிறுவனுக்கு தையலும் போட்டனர். இந்த நிலையில் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பேரூராட்சி நிர்வாகம் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குழந்தை
சென்னை | சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டியின் கழுத்தில் சிக்கிய கேபிள் வயர்!

இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமாவிடம் கேட்டபோது, அப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளதாகவும், குழந்தைகளுக்கு முறையாக சிகிச்சை வழங்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com