வளிமண்டல சுழற்சியாக மாறிய புயல் - 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல சுழற்சியாக மாறிய புயல் - 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல சுழற்சியாக மாறிய புயல் -  12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மன்னார் வளைகுடா பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல நாளையும் (08.12.2020) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம்:

மணியாச்சி 16 செ.மீ.
வைப்பார் 12 செ.மீ.
கடம்பூர் 11 செ.மீ.
கயத்தாறு செ.மீ.
சீர்காழி , காரைக்கால், சித்தார் தலா 9 செ.மீ.

தலைஞாயிற் , மயிலாடுதுறை, வாலிநோக்கம் , நீடாமங்கலம் தலா 8 செ.மீ.
குடவாசல் , மணல்மேடு , பாளையம்கோட்டை தலா 7 செ.மீ.


மேலும் விவரங்களுக்கு: imdchennai.gov.in இணையதளத்தை காணவும்.

<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/dYjW4A03pT0" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com