அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடும் விராலிமலைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
விராலிமலை விஜயபாஸ்கர் தொகுதியில் கடந்த ஒன்றரை மணிநேரமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 20க்கும் மேற்பட்ட சுற்று வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையில் எண்ணிக்கை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
மின்னணு இயந்திரத்தில் இருந்த எண்கள், முகவர்களிடம் உள்ள எண்களுடன் மாறுபட்டு இருந்ததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டிருந்தது. முதல் சுற்றில் சுமார் ஒருமணி நேரம் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 2ஆவது சுற்றில் ஒன்றரை மணி நேரமாக பாதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மின்னணு இயந்திரத்தில் உள்ள எண்கள், முகவர்களிடம் உள்ள எண்களுடன் மாறுபட்டு இருந்ததால் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.