\
மெரினா கடற்கரையில் இன்னும் 500 பேர்.. போலீஸ் பாதுகாப்பு

மெரினா கடற்கரையில் இன்னும் 500 பேர்.. போலீஸ் பாதுகாப்பு

மெரினா கடற்கரையில் இன்னும் 500 பேர்.. போலீஸ் பாதுகாப்பு
Published on

சென்னை மெரினா கடற்கரையில் இன்னும் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும், கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும், தடியடி நடத்திய காவல்துறை மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது மெரினா கடற்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள சாலை முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, மீனவர்கள் உதவியோடு சிலர் விசைப் படகுகள் மூலம் உணவு கொண்டு சென்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com