ஸ்டெர்லைட்டில் உற்பத்தியை நிறுத்துங்கள் ! மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

ஸ்டெர்லைட்டில் உற்பத்தியை நிறுத்துங்கள் ! மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு
ஸ்டெர்லைட்டில் உற்பத்தியை நிறுத்துங்கள் ! மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியை நிறுத்துமாறு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளார். 

“மே 18, 19 ஆம் தேதிகளில் ஸ்டெர்லைட் ஆலைகளில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் மின் உற்பத்திக்கான பணிகள் திரும்ப நடைபெற்றது தெரியவந்துள்ளது” என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரைபடி இன்று காலை 5.15 மணியளவில் துண்டிக்கப்பட்டது. 

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியானது, கடந்த மார்ச் 31ம்  தேதியோடு முடிவடைந்தது. இதனையடுத்து அனுமதியை புதுப்பிக்க ஸ்டெர்லைட்  நிர்வாகம் தாக்கல் செய்திருந்த மனுவை மாசுகட்டுப்பாடு வாரியம் நிராகரித்தது. ஆலைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது ஆலையில் உற்பத்தியை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இத்தகைய நடவடிகையை எடுத்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com