ஸ்டெர்லைட் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் - தினகரன்

ஸ்டெர்லைட் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் - தினகரன்

ஸ்டெர்லைட் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் - தினகரன்
Published on

ஸ்டெர்லைட் ஆலையை சட்டப்படி நிரந்தரமாக மூடும் வரை தமிழக அரசு எல்லா நிலைகளிலும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை நீடிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மகிழ்ச்சிக்கும் வரவேற்புக்கும் உரியது. இது, தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கும், தியாகத்திற்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும். சட்டத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பில் எந்தவித மாற்றமும் வந்துவிடாத அளவுக்குத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு மேற்கொள்ளவேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை சட்டப்படி நிரந்தரமாக மூடும் வரை தமிழக அரசு எல்லா நிலைகளிலும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com