தமிழ்நாடு
ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்தப் பகுதி மக்கள் கடந்த 43 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் இல்லாததால், பின்னர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுவை அளித்தனர். மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையால் தாங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் பொதுமக்கள் தெரிவித்துள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்காக கையகப்படுத்திய விளைநிலத்தை மீண்டும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

