ஓய்வுபெற்ற நீதிபதி அருணாவை எதிர் மனுதாரராக சேர்க்கக் கோரும் மனு தள்ளுபடி

ஓய்வுபெற்ற நீதிபதி அருணாவை எதிர் மனுதாரராக சேர்க்கக் கோரும் மனு தள்ளுபடி
ஓய்வுபெற்ற நீதிபதி அருணாவை எதிர் மனுதாரராக சேர்க்கக் கோரும் மனு தள்ளுபடி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணை கோரும் வழக்கில், விசாரணை ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசனை எதிர் மனுதாரராக சேர்க்கக் கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், துப்பாக்கிச்சூடு தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார். சிபிஐ விசாரணை கோரும் வழக்கு நிலுவையில் உள்ளதால், தற்போது நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரி வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் கூடுதல் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள், ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்கக் கோராமல் நீதிபதியையே இணைக்க வலியுறுத்துவது ஏற்புடையதல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். கள நிலவரத்தை ஆய்வு செய்யாமல் ஊடக செய்திகளின் அடிப்படையிலேயே பெரும்பாலும் பொதுநல மனு தாக்கல் செய்யப்படுவதாகவும், அதுபோன்ற வழக்குகளை ஏற்பதில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com