"ஸ்டெர்லைட்டில் 1000 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்வோம்" - வேதாந்தா

"ஸ்டெர்லைட்டில் 1000 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்வோம்" - வேதாந்தா

"ஸ்டெர்லைட்டில் 1000 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்வோம்" - வேதாந்தா
Published on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் முழு திறனுக்கு 1000 டன் மருத்துவ உதவிக்கான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்று வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் முழு திறனுக்கு 1000 டன் மருத்துவ உதவிக்கான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். இது குறித்து நாங்கள் ஏற்கெனவே வல்லுநர்களிடம் பேசி வருகிறோம். மேலும் இங்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜனை, எப்படி தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தேவை இருக்கும் இடங்களுக்கு கொண்டு செல்வதென்றும், இந்தியாவில் மற்ற இடங்களுக்கும் கொண்டு செல்வது குறித்தும் பேசி வருகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிப்புக்கு அனுமதிப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தற்காலிகமாக அனுமதி வழங்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ஆக்சிஜன் தயாரிக்க, ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு 4 மாதங்கள் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு வெளியிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com