ஆக்சிஜன் உற்பத்தி: ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி

ஆக்சிஜன் உற்பத்தி: ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி
ஆக்சிஜன் உற்பத்தி: ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி

ஆஸ்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக 4 மாதத்துக்கு திறக்கலாம் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் "ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் தயாரிக்க அனுமதியில்லை.  ஸ்டெர்லைட் ஆலைக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் 4 மாதங்களுக்காக மீண்டும் வழங்கப்படும். இப்போது இருக்கும் சூழலை கருத்தில்கொண்டு கொடுக்கப்பட்டிருக்கும் அனுமதி, நீட்டிப்பு குறித்து பின் முடிவெடுக்கப்படும். உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை அளிப்பதில் தமிழகத்துக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும்” என்றும் அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக இவ்விவகாரம் தொடர்பாக நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஆலையை திறக்க பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com