ஆட்டோ மொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்..!

ஆட்டோ மொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்..!

ஆட்டோ மொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்..!
Published on

ஆட்டோ மொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்‌ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் ம‌த்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சி குறித்தும், ‌மேம்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பி‌ன்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆட்டோ மொபைல் துறையில் ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டி உள்ளதாக தெரிவித்தார்.

பிஎஸ் 4-இல் இருந்து பிஎஸ் 6-க்கு நடைமுறை மாறுவதே, வாகனத்துறை மந்த நிலைக்கான காரணம் என்று கூறிய அமைச்சர், அனைத்து துறைகளிலும் உள்ள பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். பொருளாதார மந்தநிலைக்கு பிரதமர் மோடி அரசின் தவறான முடிவுகளே காரணம் என்று கூறியுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் விமர்சனத்துக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com