தமிழ்நாடு
சிலைக் கடத்தல் வழக்கில் அரசாணை பிறப்பித்தது எப்படி?: நீதிபதி கேள்வி
சிலைக் கடத்தல் வழக்கில் அரசாணை பிறப்பித்தது எப்படி?: நீதிபதி கேள்வி
கும்பகோணம் நீதிமன்றத்தை தவிர மற்ற இடங்களில் உள்ள சிலை வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதில், கும்பகோணம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை தவிர, மற்ற இடங்களில் உள்ள சிலை வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கொள்கை முடிவு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்வதாகக்கூறிவிட்டு அரசாணை பிறப்பித்தது எப்படி? என நீதிபதி கேள்வி எழுப்பினார். தனிப்பிரிவு நீதிமன்றம் உள்ள நிலையில், சிபிஐக்கு வழக்கை மாற்ற முடியுமா? என்றும் வினவினார். மேலும் சிலைகளை ஆவணப்படுத்துவது குறித்து லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் உடனான கடிதம் குறித்து தமிழக அரசு என்ன முடிவு எடுத்துள்ளது? என்றும் நீதிபதி கேள்வி கேட்டார்.