கம்பி வேலி கூண்டில் திருவள்ளுவர் சிலை..!

கம்பி வேலி கூண்டில் திருவள்ளுவர் சிலை..!

கம்பி வேலி கூண்டில் திருவள்ளுவர் சிலை..!
Published on

தஞ்சையில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை சுற்றி கம்பி வேலி கூண்டு அமைக்கப்பட்டது

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் அவமதிக்கபட்டது. இதனையடுத்து அந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்த நிலையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த பாஜக சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத் திருவள்ளுவர் சிலைக்கு காவியுடை அணிவித்து ருத்ராட்ச மாலை அணிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள சாலையில் யாரும் செல்லாதவாறு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வேறு மாற்று வழியாக  கடந்த 3 நாட்களாக சென்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் திருவள்ளுவர் சிலையை சுற்றி வேலி அமைக்கும் பணி இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது திருவள்ளுவர் சிலையை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டது. மேலும் சிலையை கண்காணிக்க 3 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com