சிலைக் கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரிய டிவிஎஸ் தலைவர்

சிலைக் கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரிய டிவிஎஸ் தலைவர்
சிலைக் கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரிய டிவிஎஸ் தலைவர்

சிலைக் கடத்தல் வழக்கில் டிவிஎஸ் குழும நிறுவனத்தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாக, ரங்கராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நம்பெருமாள் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாகவும், பெரிய பெருமாள் சிலையில் சாலிக்ராம கற்களை காணவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை சிலைக் கடத்தல் பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக சிலைக் கடத்தல் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் நாளை விசாரணையை தொடங்கிறார்.

இந்நிலையில் டிவிஎஸ் குழும நிறுவனத்தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். ஏனெனில் அவர் வேணு சீனிவாசன் ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்தவர். எனவே சிலைக் கடத்தல் வழக்கில்தான் கைது செய்யப்படலாம் என்ற எண்ணத்தில் அவர் முன்ஜாமீன் கோரியுள்ளார். 

தமிழகத்திலுள்ள பழமையான கோயில்களை புணரமைக்கும் பணியை நீண்ட காலமாக டிவிஎஸ் குழுமம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com