காவல் நிலைய குளியலறையில் வழுக்கி விழும் குற்றவாளிகள்! - மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

காவல் நிலைய குளியலறையில் வழுக்கி விழும் குற்றவாளிகள்! - மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

காவல் நிலைய குளியலறையில் வழுக்கி விழும் குற்றவாளிகள்! - மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
Published on

சென்னை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் குளியலறையில் வழுக்கி விழுந்தது தொடர்பாகச் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் சென்னை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் குளியலறையில் வழுக்கி விழுந்தது தொடர்பாக எத்தனை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்றும் காவல்துறையினர் வழுக்கி விழுந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளனவா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கிறது. குளியலறைகளில் முழுமையாகப் பராமரிக்காத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் குளியலறையில் வழுக்கி விழும் சம்பவங்களைத் தடுப்பதற்கு ஆணையர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் எனக் கேட்கப்பட்டுள்ளது.

அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லருக்கு எதிராகப் புகார் அளித்த தேவேந்திரன் என்பவரை அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது குளியலறையில் வழுக்கி விழுந்ததாக வந்த செய்தியின் அடிப்படையில் சென்னையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com