மத்திய அரசின் சூழ்ச்சிக்கு மாநில அரசு பலியாகிவிட்டது: தனியரசு எம்.எல்.ஏ. காட்டம்
நீட் விவகாரத்தில் மத்திய அரசின் சூழ்ச்சிக்கு மாநில அரசு பலியாகிவிட்டதாக கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வால் மருத்துவக் கனவை இழந்து தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்தினரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் குழுமூரில் மாணவி அனிதாவின் குடும்பத்தினரை எம்.எல்.ஏக்கள் தனியரசும், தமிமுன் அன்சாரியும் நேரில் சந்தித்தனர்.
ஆளும் அதிமுகவின் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களான தனியரசும், தமிமுன் அன்சாரியும் அனிதாவின் சகோதரர், குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
அதன்பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய தனியரசு, நீட் விவகாரத்தில் மத்திய அரசின் சூழ்ச்சிக்கு மாநில அரசு பலியாகிவிட்டதாக கூறினார்.
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கூறுகையில், நீட்டுக்கு எதிராக தன்னிச்சையாக செயல்படுபவர்களை சமூக விரோதிகள் என கொச்சைப்படுத்தக் கூடாது என தெரிவித்தார்.