நெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்: இறுதிக்கட்டத்தில் வார்டு சீரமைப்புகள்

நெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்: இறுதிக்கட்டத்தில் வார்டு சீரமைப்புகள்

நெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்: இறுதிக்கட்டத்தில் வார்டு சீரமைப்புகள்
Published on

தமிழகத்தில் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் வார்டு சீரமைப்பு இறுதிப்பட்டியலை வெளியிட மாநிலத் தேர்தல் ஆணையம் முடிவு
 செய்துள்ளது. 

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுகளை மறுசீரமைப்பு செய்து மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்மீது பொதுமக்கள் கருத்துக்களோ, ஆட்சேபனையோ தெரிவிக்க ஜனவரி 12ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி பொதுமக்களின் கருத்துக்களை பெறும் பணியில் தற்போது தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. காஞ்சிபுரம், வேலூர், திருச்சி, கோயம்புத்தூர், சேலம், தூத்துக்குடி, மதுரை ஆகிய மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இப்பணி நடைபெற்று வருகிறது. 

இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களின் கருத்துக்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கேட்கப்பட்டு, அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும், பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் வார்டு சீரமைப்பு இறுதிப்பட்டியலை வெளியிட மாநிலத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. பின்னர் அதன் அடிப்படையில் பிப்ரவரி மாத இறுதிக்குள் இடஒதுக்கீடு, பெண்களுக்கான ஒதுக்கீடு பணிகள் முடிக்கப்படும். இதைதொடர்ந்து ஏப்ரல் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com