தேர்தல் திருவிழா: 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு... முழு விவரம்!

தேர்தல் திருவிழா: 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு... முழு விவரம்!
தேர்தல் திருவிழா: 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு... முழு விவரம்!

5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். 

டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறும்போது, “ கொரோனா காலம் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தேர்தல் நடத்துகிறோம். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

தேர்தலை நடத்துவதில் மருத்துவர்கள், ஊழியர்கள் , செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு பெரும் பங்கு இருக்கிறது. தேர்தலுக்காக தமிழகத்தில் 88,936 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் தரைத்தளத்தில் இருப்பதை உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

5 மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளில் 18.68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 2.7 லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் தரைத்தளத்தில் இருப்பதை உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் மூலம் வாக்களிக்கலாம். தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனாத் தடுப்பூசி போடப்படும். வாக்குப்பதிவு நேரம் 5 மாநிலங்களிலும் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வேட்பாளர்கள் ஒரு தொகுதிக்கு ரூ.22 லட்சமும், மற்ற 4 மாநிலங்களில் ரூ 30.8 லட்சம் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

5 மாநில தேர்தல் அட்டவணை பின்வருமாறு:- 

தமிழ்நாடு :-

கன்னியாகுமரி இடைத்தேர்தல்:- ஏப்ரல் 6

கேரளா:

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் 2021

தேர்தல் நாள்: ஏப்ரல் 6

வேட்புமனு தாக்கல் தொடக்கம்: மார்ச் 12
வேட்புமனு தாக்கல் நிறைவு: மார்ச் 19

வேட்புமனு பரிசீலனை: மார்ச் 20
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 22 

வாக்கு எண்ணிக்கை:மே 2 

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் 2021

தேர்தல் நாள்: ஏப்ரல் 6

வேட்புமனு தாக்கல் தொடக்கம்: மார்ச் 12
வேட்புமனு தாக்கல் நிறைவு: மார்ச் 19

வேட்புமனு பரிசீலனை: மார்ச் 20
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 22 

வாக்கு எண்ணிக்கை:மே 2 

அசாம் 

மேற்கு வங்ககத்தில் 8 கட்டங்களாக தேர்தல்

முதற்கட்ட தேர்தல் ( 30 தொகுதிகள்) :- மார்ச் 27

இராண்டாம் கட்ட தேர்தல் (30 தொகுதிகள்) :- ஏப்ரல் 1

மூன்றாம் கட்ட தேர்தல் ( 31 தொகுதிகள்)    :- ஏப்ரல் 6

நான்காம் கட்ட தேர்தல் (44 தொகுதிகள்)     :- ஏப்ரல் 10

ஐந்தாம் கட்ட தேர்தல் ( 45 தொகுதிகள்)       :- ஏப்ரல் 17

ஆறாம் கட்ட தேர்தல் ( 43 தொகுதிகள்)        :- ஏப்ரல் 22

ஏழாம் கட்ட தேர்தல் (36 தொகுதிகள்)           :- ஏப்ரல் 26

எட்டாம் கட்ட தேர்தல் (35 தொகுதிகள்)         : ஏப்ரல் 29

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com